Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது அல்ல அது மத்திய அரசு திட்டம் – திருச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பழைய கதவணை கடந்த 2018 மாதம் ஆகஸ்ட் 22 ம் தேதி வெள்ள பெருக்கால் 9 மதகுகள் திடீரென உடைந்தது.

புதிய கொள்ளிடம் கதவணை 2019 மார்ச்சில் ரூ 387 கோடியில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் முடிக்க இருபத்தி நான்கு மாத காலம் .புதிய  கதவணையில் 45 மதகுகள் உள்ள பகுதியில் தற்பொழுது 100%  பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று புதிய கொள்ளிடம் கதவனையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் புதிய கொள்ளிடம் கதவனை விரைவில் திறக்கப்படும் என்றார்.

காவிரி குண்டாறு திட்டத்தை திமுக முடக்குவதாக அதிமுக குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன்… காவிரி குண்டாறு திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது அல்ல அது மத்திய அரசு திட்டம்.

வெள்ள காலங்களில் காவிரி செல்லும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணைகள் கட்ட சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற கேள்விக்கு உயிர்அற்றவரை பிழைக்க வைக்க கூடிய அறிவியல் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் அதற்கான திட்ட கூறுகள் உள்ளது.

தெலுங்கானாவில் உள்ள நீர்த்திட்டங்களை போல் தமிழகத்தில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளது விரைவில் அது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார். காவிரி சரபங்கா திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட சேமித்து வைக்கவில்லை. என பதிலளித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட முடியுமா என்ற முன்னாள் அமைச்சர் ராஜு கூறியது குறித்த கேள்விக்கு அவர் யார் என்று எனக்கு தெரியாது என தெரிவித்தார். தமிழக முதல்வர் அமைச்சர்கள் பேச்சால் என்னால் தூங்க முடியவில்லை என்று பேசியதற்கு அதற்கு அவரே தான் கூறிவிட்டார் என்றார் அமைச்சர் துரைமுருகன்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *