Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வாழைப்பழம் அளவை உயர்த்த இலக்கு – தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பேச்சு

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் திருச்சி மாவட்டத்தில் தேசிய அளவிலான புவிசார் குறியீடு உடைய வாழை ரகங்கள் மற்றும் பாரம்பரிய வாழை ரகங்களின் தற்போதைய நிலை, வாழையின் ஏற்றுமதி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி துறையின் தலைவர் அங்கமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இணையதளம் மூலம் தமிழக விவசாயம் மற்றும் உழவர் நலன் துறை பிரிவான விவசாய உற்பத்தி பிரிவின் ஆணையர் மற்றும் செயலர் சமயமூர்த்தி, தோட்டக்கலை துறையின் இணை பொது இயக்குனர்  சிங் ஆகியோர் இணையதளம் வாயிலாக இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கருத்துரங்கில் கலந்து கொண்டு பேசிய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன்… இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த பரப்பளவில் 13 சதவீதம் மட்டுமே பல ரகங்கள் பயிரிடப்படுகிறது. அதில் உலக அளவில் வருடத்திற்கு 34 மில்லியன் டன் (20%) வாழைப்பழங்கள் இந்தியா தான் உற்பத்தியை வழங்குகிறது. அதேபோல் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா குஜராத் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்கள் இணைந்து மொத்தம் 70 சதவீத வாழை உற்பத்தியை வழங்கி வருகிறது. அதில் 17 சதவீதம் பூவன், ரஸ்தாளி, நேந்திரன், உள்ளிட்ட ரகங்கள் தலா 5 சதவீதம் பயிரிடப்பட்டு வருகிறது.

உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கக்கூடிய ஒரு தனி மனிதனுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 60 கிராம் எடையுள்ள வாழைப்பழம் கிடைக்கிறது. எனவே அதை 100 கிராம் அளவிற்கு உயர்த்த வாழையின் உற்பத்தியை அதிகப்படுத்துவது தான் இலக்கு என்றும், இந்திய அளவில் மொத்தம் 17 சதவீதம் பூவன் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 5 சதவீதம் மட்டுமே மற்ற வாழை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் 1.34 மெட்ரிக் டன் இந்தியாவிலிருந்து வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு 413 கோடி என மதிப்பிடப்பட்டது. ஆனால் 2021-ல் 3.41 லட்சம் டன் 1300 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் புவிசார் குறியீடு உடைய வாழைப்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதில் நாம் தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகிறோம். மேலும் இந்த இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கருத்தரங்கில் முதல் நாளான இன்று தமிழ்நாடு தோட்டக்கலை துறை இயக்குனர் பிருந்தா தேவி, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கணக்கியல் துறையை சேர்ந்த ராஜலட்சுமி தேவராஜ்,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இந்திய தோட்டக்கலை துறையின் துணைவேந்தர் இந்திரேஷ் உள்ளிட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *