Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காற்று விழிப்புணர்வு – பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள்

காற்றே என்றழைத்த கவிஞர் திருமுருகன் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் 245 மாணவர் – மாணவியர் பங்கேற்ற காற்று மாசு குறைப்பு மற்றும் சுத்தமான எரிபொருளும் அதன் பயன்களும் பற்றிய பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் ஆர்.சி . மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது

வரவேற்று பேசிய வாய்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குனரும், லால்குடி கல்வி மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான அ.கிரிகோரி…. மத்திய மற்றும் மாநில சுற்றுச்சூழல் துறை இப்போட்டிகளுக்கு உதவியும் ஆதரவும் தருவதற்கு நன்றி தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை ஆலோசனைப்படி, 6,7,8,9 வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு துறைகளைச் சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 16 பேர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர்.

வெற்றி பெற்ற மாணவர் – மாணவிகளுக்கு பரிசளிக்க வந்த திருச்சி மத்திய சிறைச்சாலை மேலாளர் மற்றும் கவிஞர் அ.திருமுருகன் கூறுகையில்… மரியாதைக்குரிய காற்றே என்று அழைத்தது மாணவச் செல்வங்களையும், ஆசிரிய பெருமக்களையும் வியப்பில் ஆழ்த்திற்று. பல நாட்கள் உணவின்றி இருந்து விடலாம். சில நாட்கள் தண்ணீரின்றி இருந்து விடலாம். ஆனால் ஒருசில நிமிடங்கள் கூட காற்று இல்லாமல் இருக்கமுடியாது என்று தெரிவித்தார். தூய காற்றின் முக்கியத்துவத்தை உலகெங்கும் உணரத் தொடங்கி இருக்கின்ற இவ்வேளையில், காற்று மாசை குறைப்பதற்கும், சுத்தகமான எரிபொருளால் நற்காற்றுக்கு வழிவகுப்பதற்கும் இந்த போட்டிகள் உதவி உள்ளது. தூய காற்றாக இருந்ததை மாசுக்கள் சூழ்ந்திருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், காற்றை தூய்மையாக்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி பற்றிய துணிப் பதாகையில் குறிப்பிட்டபடி பொருளை எரிக்காமல் இயந்திர புகை கூட்டாமல் காற்று மாவு தடுப்போம். மரங்கள் வளர்த்து அண்டவெளி – ஓசோன் மண்டலம் பாதுகாத்து நற்காற்றுக்கு வழி வகுப்போம். தூய காற்றே இன்று மற்றும் நாளைய தலைமுறைக்கு நாம் தரும் பரிசு என்று வலியுறுத்தினார். வாய்ஸ் அறக்கட்டளை நிர்வாகி ஜேனட் ப்ரீத்தி நடுவர்களை அறிமுகம் செய்து வைக்க, கவிஞர் திருமுருகன் படைத்த தூய காற்றே என்ற கவிதை புத்தகம் பரிசளிக்கப்பட்டன. திருச்சி கல்வி மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் இ. சகாயராஜ் தான் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே மரங்கள் வளர்ப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பதிலும் ஈடுபடுவதை குறிப்பிட்டு மாணவச்செல்வங்களும் ஆசிரியபெருமக்களும் தூய காற்றுக்கு முழு முயற்சி எடுக்க வேண்டுமென்றார்.

நிகழ்ச்சிகளை வாய்ஸ் குழுவினர் ஜோ. பிரகாஷ் குமார், கா.மணிகண்டன், ரே.பிரகாஷ் ராஜ், க.செல்வகுமார் மற்றும் சமூகப்பணி மாணவர்கள் வி.விஜின், பி.மணிகண்டன், த.ஹரிஹரன், ப.சரோன் ஐடா ப.விஸ்வா ஒருங்கிணைத்தனர். அனைவருக்கும் துணிப்பைகள் வழங்கப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *