திருச்சி மாவட்டம் முசிறியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் ஐஜேகே கட்சியின் சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஆத்தூர் ராம் என்பவரின் கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் கட்டுக்கட்டாக வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் இருப்பதாக திமுகவினர் தேர்தல் ஆணையத்திற்கு போன் மூலம் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த பறக்கும் படையினர் காரை சுற்றி வளைத்து சோதனை இட்டனர். சோதனையில் கார் உள்ளே பணம் எதுவும் இல்லாததால் திமுகவினரும் தேர்தல் பறக்கும் படையினரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது ஐஜேகேவினர் பணம் வைத்திருப்பதாக திமுகவினர் புகார் கூறி பணம் கைப்பற்றாத சம்பவம் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே தொட்டியத்தில் ஐஜேகே கட்சியினர் தங்கி இருந்த லாட்ஜில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினர், போலீசார் சென்று சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
பணம் ஏதும் கிடைக்காததால் ஏமாற்றத்தில் வெளியே வந்த வருமானவரித்துறை அதிகாரிகளை அங்கிருந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கூட பதில் கூறாமல் அலறி அடித்துக் கொண்டு காரில் ஏறி சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இதனால் முசிறி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments