திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக இருந்த மூன்று ஆண் பயணிகளை பிடித்து சோதனை செய்தனர். அப்போது 16 லட்சத்து 16ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 225 கிராம் தங்கத்தை டிராலி சக்கரத்தில் இருந்துஅதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments