திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் போதையில் பணம் கேட்டு மிரட்டும் இளைஞர் வீடியோ வைரல் ஆகி வருகிறது.திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. தினம்தோறும் நூற்றுக்கணக்கானோர் அங்கு சென்று மது வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் ஒரு நபர் அங்கு சென்று மது வாங்கி அருந்திவிட்டு போதையில் டாஸ்மாக் கடையில் வேலை செய்யும் ஊழியரை பணம் கேட்டு மிரட்டுகிறார். தனக்கு இருபது ரூபாய் வேண்டும் உடனடியாக அதனை தர வேண்டும் என அவர் தகாத வார்த்தைகளை கொண்டு கடை ஊழியரை திட்டியுள்ளார். அப்போது எனக்கு ஜெயில் எல்லாம் 15 நாள் தான் அதன் பின்பு நீ உயிரோடு இருக்க மாட்டாய் என கொலை மிரட்டலும் விடுக்கிறார்.
அதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மற்ற மது பிரியர்கள் பொது இடங்களில் அசிங்க மாக பேசிய நம்பரை தண்டிக்க வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments