உலகபங்கு சந்தையின் தந்தை என்றால் வாரன் பபேட்டை சொல்வார்கள். இந்திய பங்குச்சந்தையின் தந்தை என்றால் அது ராகேஷ் ஜீன்ஜீன்வாலாவைத் தான் குறிக்கும் இந்தியாவில் விமான சேவைகளைப் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களே வழங்கி வருகின்றன. இதற்கு மாற்றாக ராகேஷ் ஜீன்ஜீன்வாலா ஆரம்பிக்கும் விமான நிறுவனத்தின் பெயர் தான் ஆகாஷ்
இந்தப் புதிய விமான சேவை வெற்றி பெற்றால் பல இந்தியர்களுக்கு விமான சேவையை நடத்துவதற்கு உந்து சக்தியைக் கொடுக்கும். ராகேஷ் தமது நீண்ட முதலீட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நிச்சயம் இந்த நிறுவனத்தைசிறப்பாகக் கையாள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தனியார் துறையில் விமான நிறுவனத்தை நடத்தியவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். உதாரணமாக ஆரம்பகாலத்தில் டாடா, நிறுவனம் விமான சேவையை வழங்கி வந்தது. ஆனால் அரசு இதை கையகப்படுத்திய பின்னர்தான் டாடா குழுமம் விஸ்வரூபம் அடைந்தது. அதன்பின்னர் வந்த என்.இ.பி.சி, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட், கிங்பிஷர் டெக்கான் ஏர்வேஸ் இப்படி பல நிறுவனங்கள் காலப்போக்கில் காணாமல் போனதோடு நிறுவனர்கள் கடனில் தத்தளிக்கும் நிலையும் ஏற்பட்டது. ரவுசு காட்டுவாரா ராகேஷ் ஜீன்ஜீன்வாலா வானம் அவருக்கு வசப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments