அகில பாரத மகா இந்து சபா மாநில பொதுச் செயலாளர் ராமநிரஞ்சன் அவர்கள் இன்று திருச்சி தொல்லியல் கண்காணிப்பு துறை ராகுல் அவர்களை சந்தித்து திருச்சி சரக்கத்திற்கு உட்பட்ட ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட மிகவும் தொன்மையாக சிதலம் அடைந்த நிலையில் உள்ள
கோயில்களின் பட்டியலை தயார் செய்து வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் திருப்பணி உடனே தொடங்க வலியுறுத்தினார் . மனு அளித்துவிட்டு பத்திரிக்கையாளரை அவர் சந்தித்த பொழுது சென்ற வருடம் அக்டோபர் 2024ஆம் ஆண்டு இதேபோல் மனு கொடுத்திருந்தோம் ஆனால் அம்மனுவுக்கு
இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த காரணத்தால் இன்று தட்டில் பழம் பூ மாலை வைத்து சங்கு ஊதி தொல்லியல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தோம். தொல்லியல் துறை உயர் அதிகாரி ராகுல் அவர்கள் இதற்குரிய நடவடிக்கையை நாளை முதலே தொடங்குகிறேன் என்று உறுதி அளித்தார். நாளை காலையில் வந்து மனுவில் உள்ள
கோவில்கள் அனைத்தையும் ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்து தருவதாக உறுதியளித்தார். அதிகாரிகள் செயல்பட தயாராக தான் உள்ளனர் ஆனால் இப்படிப்பட்ட பழமையான கோயில்களை புரணமைக்க நிதி தேவை அந்த நிதியை மத்திய அரசு சிதலமடைந்த கோயில்களை சரிசெய்ய ஒதுக்க வேண்டும்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள பழமையான கோயிலை சீர் செய்ய பலவித கட்டுப்பாடுகள் உள்ளன. வட இந்திய பகுதிகளில் இது போல் கோவில் பணிகளை மிக விரைவாக செய்து முடிக்கின்றனர். அதேபோல் தமிழகத்திலும் அதிகாரிகள் விரைந்து இது போல் இருக்கும் கோயில்களை புரணமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோல் பழமையான
கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் கோவில்களை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் அதையும் இம்மனுவில் அளித்துள்ளோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments