நீர் ஸ்தலமாக விளங்க கூடியது திருச்சி திருவானைக்கோவில். இங்குள்ள தெப்பக்குளம் ராம தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் போது இந்த குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது. 42,350 கன மீட்டர் கொள்ளளவுள்ள இந்த குளத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து மலட்டாறு வழியாக தண்ணீர் நிரப்பபட்டது. ஆனால் தற்போது அதன் வழிதடங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் இந்த குளத்திற்கு தண்ணீர் நிரப்புவதற்காக பழுதடைந்த குழாய்கள் சீரமைக்கபட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று குளத்தை பார்வையிட்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்… திருச்சியில் தற்போது திருவானைக்கோவில் குளம் சீரமைக்கப்பட்டது போல, ஸ்ரீரங்கம் மற்றும் மலைக்கோட்டை தெப்பக்குளமும் விரைவில் சீரமைக்கப்படும். இதற்காக புதிய நீரேற்று நிலையம் அமைக்கப்படும் என்றும், திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட குளங்களை முழுமையாக செப்பனிட்டு அனைத்து குளங்களிலும் நீரை நிரப்பி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் எடமலைப்பட்டி புதூரில் உள்ள 4க்கும் மேற்பட்ட குளங்கள், பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள 11 ஏக்கர் பரப்பிலான குளம் ஆகியவற்றை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக விரைவில் திருச்சி மாநகரில் உள்ள அனைத்து குளங்களும் சீரமைத்து நீர் நிரப்பி பராமரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments