கடந்த 27ஆம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. இதற்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டது. இந்த புயல் மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை கொட்டியது.
இந்த புயலால் சென்னை முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் திருச்சி வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கத்தினர் மினி லாரி முழுவதும் பிஸ்கட், உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.
தலைவர் எஸ்பி முருகேசன், செயலாளர் ஆர் காளிமுத்து, பொருளாளர் கரிகாலன் ரவி, மாவட்ட துணைத் தலைவர் எஸ் மயில்வானம், துணைத் தலைவர் ஏ பி ரவி, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் ஹோண்டா குமார், துணை செயலாளர் பாபு, துணைச் செயலாளர் ஆகியோர் இணைந்து இந்த நிவாரண பணியில் ஈடுபட்டனர்.
Comments