ஆல்பா நிறுவனங்கள் தங்களது ஆண்டு விளையாட்டுப் போட்டியை ஆகஸ்ட் 23ஆம் தேதி தங்கள் வளாகத்தில் கொண்டாடின. விளையாட்டு வீரர்கள் தங்களது போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தினர்.
திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விளையாட்டு வீரர்களை வாழ்த்தி அவர்கள் உயரங்களை அடைய ஊக்கப்படுத்தினார். அவர் தனது உரையில், மற்ற பயனற்ற செயல்களை விட மாணவர்களின் கல்வி மற்றும் திறன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மாணவர்களின் கரவொலிக்கு மத்தியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments