Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி புனித சிலுவை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் நூற்றாண்டு முன்னாள் மாணவர்களின் கூட்டம் கடந்த மார்ச் 29ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவரான மணிமொழி தியோடர் முன்னாள் மாணவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் இஸ்ரோ டி.ஆர்.டி.ஓ ககன்யான் திட்டம் முன்னாள் இயக்குனர் சிஏஐஆர், டிஆர்டிஓ பெங்களூர் மற்றும்

கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ் மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆகியோர் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ரூபி மெர்லின் சிறப்பு விருந்தினர்களையும் உதவி பேராசிரியர் முன்னாள் மாணவர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.

 

ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஷெரில் அந்தோனெட் அறிக்கை வாசித்தார் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செய்தி மடல் “இன் டச்” தொகுதி பதினாறு மார்ச் 2023 சிறப்பு விருந்தினர் மணிமொழி தியோடர், ஐஏஎஸ் கந்தசாமி ஆகியோர் முதல் பிரதியை வழங்க கல்லுாரி  முதல்வர் முனைவர் சகோதரி கிறிஸ்டினா பிரிஜிட் செயலர் முனைவர் அருட் சகோதரி ஆனி சேவியர் பெற்றுக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் தங்களுடைய கல்லூரி கால அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டனர் கல்லூரியின் செயலர் முனைவர் சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்தார் மேலும் வரும் ஆண்டுகளில் அவர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க வாழ்த்தினார்.

மேலும் கல்லூரி முதல்வர் முனைவர் கிறிஸ்டினா பிரிட்ஜெட் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூடி வாழ்த்தியதோடு முன்னாள் மாணவர் சந்திப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முன்னாள் மாணவர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர்களால் நடத்தப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன முன்னாள் மாணவர்கள் இணையத்தின் வழி தங்களது அனுபவங்களை நேரடியாக பகிர்ந்து கொண்டனர்.முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் பணியாளர்கள் உட்பட 358 பேர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜே. அமலா இன்ஃபென்ட் ஜாய்ஸ் நன்றி உரை வழங்கினார் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு உறுதிமொழியுடனும், பகிர்வுகளுடனும் நிறைவு பெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *