திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கோவிட் தகவல் மற்றும் ஆலோசனை மையம் தொடக்க விழா நேற்றைய தினம்(24.05.21) நடைபெற்றுள்ளது.
இந்த சேவை மையத்தை
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஜமாத் தலைவர் ஹாஜி மொய்தீன் அவர்கள்
இது பற்றி கூறுகையில்,
இந்த சேவை மையத்தில் மக்களுக்காக பணியாற்றுவதற்காக திருச்சி இஸ்லாமிய மாணவர் அமைப்பு மற்றும் ஜமாத் இஸ்லாமிக் இந்த அமைப்பு இணைந்து செயல்பட உள்ளனர்.
உதவி தேவைப்படுபவர்கள் 8270340296,9952695247.
என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இன்றைக்கு கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு பல மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கை வசதிகள் குறித்த சரியான தகவல்களை தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக இந்த தகவல் மையத்தை தொடங்கி உள்ளோம்.
மருத்துவமனைகளில் மக்கள் தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்தும் காலி படுக்கை விவரங்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டு பின்பு மக்களுக்கு பயன்படும் வகையில் தகவல்களை பரிமாற இருக்கிறோம். அதுமட்டுமின்றி உணவு தேவைப்படும் மக்களுக்கு உணவு வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.
மேலும் மக்கள் இன்றைக்கு தொற்று ஏற்பட்டவர்கள் ஒருபுறமிருக்க தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால் பலர் அஞ்சுகின்றனர் அவர்களுக்கான ஆலோசனை மையமாக செயல்பட வேண்டும் என்பதற்காக மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கவும் இருக்கிறோம்.
ஜமாத் மூலம் பல மாநிலங்களிலும் இதுபோன்ற சேவை அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன தற்போது தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களிலும் செயல்பட தொடங்கியுள்ளது.
DYFI திருச்சி மாவட்ட செயலாளர் பா.லெனின் கூறுகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள எண்களில்
(9842408000,9865217659,9443965917) தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு எங்களுக்கு தெரிந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து தேவையான தகவல்களை அறிந்து உதவி தேவைபடுபவர்களுக்கு உதவிவருகிறோம் என்றார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments