Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

“நான் MLA ஆனால்” – மநீம நடத்தும் மாபெரும் ஆன்லைன் பேச்சுப்போட்டி – 5 லட்சம் பரிசு தொகை!!

மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி தலைமையகம் மக்களின் வாழ்வில் அரசியலின் பங்கையும் அதன்‌ முக்கியத்துவத்தையும் உணர்த்துவதற்காக “நான் MLA ஆனால்” எனும் தலைப்பில் பேச்சு போட்டியையும் “சீரமைப்போம் தமிழகத்தை” எனும் தலைப்பில் கட்டுரை போட்டியையும் வெளியிடுகின்றது.

மொத்த பரிசு தொகை ரூபாய் 5 லட்சமாகவும், வயது வரம்பு அடிப்படையில் மூன்று பிரிவாக நடத்தப்படும் இப்போட்டியில் முதல் பரிசு தலா 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க உள்ளனர். ஆறுதல் பரிசாக 100 நபர்களுக்கும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

நான் எம்எல்ஏ ஆனால் என்னும் தலைப்பில் உங்கள் தொகுதி பற்றிய உரையை மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவாக பதிவு செய்து 63698 77777 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் அனுப்பவும். வந்து சேர வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 14ம் தேதி இத்துடன் கலந்து கொள்பவர் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையை போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும்.

இப்போட்டியினை மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் முருகானந்தம் ஒருங்கிணைந்து நடத்துகின்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *