Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அசத்தலான ஆறு பங்குகள் !! 45 சதவிகிதம் வரை உயர வாய்ப்பு !!

வெள்ளிக்கிழமை, உள்நாட்டு பெஞ்ச்மார்க் குறியீடுகள் குறைந்து வர்த்தக்த்தை முடித்தன. பிஎஸ்இ சென்செக்ஸ் 125.65 புள்ளிகள் அல்லது 0.19% சரிந்தது, வாரத்தின் முடிவில் 66,282.74 ஆக இருந்தது. இதேபோல், NSE நிஃப்டி 50 42.95 புள்ளிகள் அல்லது 0.22% சரிந்தது, வாரத்தின் முடிவில் 19,751.05ல் முடிந்தது. இதற்கிடையில், இங்கே ஆறு பங்குகளை தரகு நிறுவங்கள் தந்துள்ளன, இதில்  45 சதவிகிதம் வரை உயர்வை காணும் என்பதால் பரிந்துரைக்கின்றன.

Stylam Industries Ltd  : “STYLAM” என்ற பிராண்டின் கீழ் அலங்கார லேமினேட்களை தயாரித்து ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. HDFC செக்யூரிட்டீஸ் பங்குகளை வாங்கும் மதிப்பீட்டை ரூபாய் 2,300 இலக்கு விலையில் கொடுக்கிறது, இது ஒப்பிடும்போது 32 சதவிகித உயர்வாகும். வெள்ளியின் இறுதி விலையான ரூ.1,742.

PI Industries Ltd.: உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் வலுவான இருப்பைக் கொண்டு, வேளாண் இரசாயனப் பொருட்களில் சந்தையில் முன்னணியில் உள்ளது.

நிறுவனத்தின் இரசாயன வரம்பில் பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள், சிறப்பு கலவைகள் மற்றும் பல உள்ளன. மோதிலால் ஓஸ்வால் இப்பங்குகளை வாங்கும் மதிப்பீட்டை வழங்குகிறது ரூபாய் 4,560 என்ற இலக்கு விலையை நிர்ணயிக்கிறது. இது வெள்ளிக்கிழமையின் இறுதி விலையான ரூபாய் 3,481 உடன் ஒப்பிடும்போது 31 சதவிகித உயர்வாகும்.

Godrej Properties Ltd : ரியல் எஸ்டேட் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது. நிறுவனத்தின் வணிகமானது குடியிருப்பு, வணிக மற்றும் நகர அபிவிருத்திகளில் கவனம் செலுத்துகிறது.

ஐடிபிஐ கேபிட்டல் பங்குகளின் கொள்முதல் மதிப்பீட்டை ரூபாய் 2,115 இலக்கு விலையில் கொண்டுள்ளது, இது வெள்ளியன்று இறுதி விலையான ரூபாய் 1,688 உடன் ஒப்பிடும்போது 25 சதவிகித உயர்வை குறிக்கிறது. Cyient Ltd  : பொறியியல், உற்பத்தி, தரவு பகுப்பாய்வு மற்றும் நெட்வொர்க்குகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. HSBC குளோபல் ரிசர்ச், பங்குகளை வாங்கும் மதிப்பீட்டை ரூபாய் 2,294 இலக்கு விலையாக சொல்கிறது, இது ஒப்பிடும்போது 32 சதவிகித உயர்வாகும். அதன் வெள்ளிக்கிழமை இறுதி விலையாக ரூபாய் 1,729 ஆக இருந்தது.

Raymond Ltd : ஜவுளி மற்றும் ஆடைத் துறைகளில் கோலோச்சும் நிறுவனம், மேலும் இந்நிறுவனம் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் பொறியியல் போன்ற பிற தொழில்களிலும் கால் பதித்துள்ளது. மோதிலால் ஓஸ்வால் பங்குகளை வாங்கும் மதிப்பீட்டை ரூபாய் 2,600 இலக்கு விலையாக சொல்கிறது. வெள்ளியன்று இறுதிப் பங்கு விலையான ரூபாய் 1,794 உடன் ஒப்பிடும்போது 45 சதவிகித  உயர்வை குறிக்கிறது.

JK Lakshmi Cement Ltd : இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் RMC & AAC பிளாக்ஸ் போன்ற சிமெண்ட் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் ஆகும். ஐசிஐசிஐ டைரக்ட் பங்குகளை வாங்கும் மதிப்பீட்டை ரூபாய் 840 இலக்கு விலையில் கொண்டுள்ளது, இது வெள்ளியன்று இறுதி பங்கு விலையான ரூபாய் 678வுடன்  ஒப்பிடும்போது 24 சதவிகித உயர்வாகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *