Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் தமிழகத்தில் பலிக்காது – தமுமுக மாநில தலைவர் திருச்சியில் பேட்டி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

அப்போது அவர் கூறுகையில்…”பாஜக வாரிசு அரசியலை முறியடித்த வருவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அந்தப் பேச்சு நகைச்சுவையாகவே உள்ளது. காரணம் இவருடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமித்ஷாவின் மகன் பிசிசிஐ கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பதவியில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

பாஜக வாரிசுகள் பலர் பாஜகவில் அமைச்சர்களாக, எம்எல்ஏக்கள் எம்பிக்களாக இருந்து வருகிறார்கள்.

பொய்மைகளை பேசி கட்சியை வளர்ப்பதே பாஜக நிலை, கொரோனா நோய் தொற்று தடுப்பு விதி மீறலில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமித்ஷாவின் மாயாஜால வித்தைகள் பீகார், உத்தரப் பிரதேசம் & இந்தியாவின் பிற மாநிலங்களில் பழித்ததை போல தமிழகத்தில் பழிக்காது. காரணம் பாஜக,அதிமுக தமிழகத்திற்கு ஏற்படுத்தியுள்ள இழப்பை தமிழகம் நன்கறியும்.

Advertisement

உதயநிதி ஸ்டாலினை கைது செய்வது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது போன்றது. நேற்று சென்னையில் நடைபெற்றது அரசு விழா இல்லை. அதிமுக- பாஜகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் என்றார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *