TTV தினகரன் தங்கி உள்ள தனியார் விடுதிக்கு எதிரே அமமுகவினர் போராட்டம் – விடுதிக்கு எதிரே உள்ள பேனரை அகற்ற காவல்துறையை கூறியதால் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டையில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு திமுக இளைஞரணி தலைவரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான
உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை டிடிவி தினகரன் தங்கியுள்ள அதே விடுதியில் தங்க உள்ளார் இந்நிலையில் டிடிவி தினகரனை வரவேற்கும் விதமாக விடுதியின் எதிரே அமமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.இந்நிலையில் காவல்துறையினர் திடீர அந்த பேனரை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதனை அறிந்த அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் ஏராளமானோர் விடுதிக்கு முன்பு காவல்துறையினரை கண்டித்தும், பேனரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவல்துறையினர் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையின் முடிவில் மாலை டிடிவி தினகரன் திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் அகற்றுவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆமமுகவினர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

டிடிவி தினகரன் விடுதியில் தங்கி உள்ள நிலையில் விடுதிக்கு எதிரே அமமுகவினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக கா ணப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
389
24 May, 2025







Comments