இந்திய ராணுவத்தில் சிக்கிமில் பணிபுரியும் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த 24 வயதான தேவ் ஆனந்த் என்பவர் மரணமடைந்தார். இந்த செய்தி கேட்டு அவரது பெற்றோர் திருச்சி சிவா எம்.பியை அணுகினர்.
இதனை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா துரிதகதியில் செயல்பட்டு இந்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பியதோடு துறை உயரதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினார். தற்பொழுது உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் திருச்சிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments