Saturday, August 23, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டிவிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு நீர் அருந்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி டிவிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு நீர் அருந்துவதன் அவசியம் மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகதிருச்சி டான்போஸ்கோ நிறுவன இயக்குநர்,ரெவ் ஆண்டனி கலந்துகொண்டு மனித உடலில் நீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தண்ணீர் குடிக்காததற்கான காரணங்கள். பல்வேறு காணொளிகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் மற்றும் நீரைச் சேமிப்பது எப்படி என்பது குறித்து விளக்கினார்.

 அன்றாட நம் வாழ்க்கையில் ஒரு நாளில் குடிக்க வேண்டிய நீரின் அளவை சரியாக அருந்துகிறோமோ என்றால் இல்லை என்பதே உண்மை.  நம்முடைய வேலை நேரம் மற்றும் நாம் இருக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நாம் நீர் அருந்துவதை முறையாக பின்பற்றுவது இல்லை.

 நீருக்கு பதிலாக குளிர்பானங்கள் போன்றவற்றை அதிகம் விரும்புகிறோம் ஆனால் இவை அனைத்தும் நீரில் உள்ள சத்துக்களை நமக்கு அளிக்காது. முறையாக நீர் அருந்துவது பல நோய்களிலிருந்து நம்மை காக்கும்.

அதுபோலவே நம்மை சுற்றி உள்ள நீர் நிலைகளை ‌ பாதுகாப்பதும் நமது கடமை ஆகும் மழை நீரை வீணடிக்காமல் சேகரித்து வைக்கலாம் இன்று நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும் நாளைய தலைமுறைக்கு இன்றியமையாத ஒன்றாகும் என்றார்.

 இந்த அமர்வின் முக்கிய நோக்கமே நிறுவனத்தின் பணி புரியும் ஊழியர்கள் போதுமான தண்ணீரை குடிக்க வேண்டும் மற்றும் தண்ணீரை ஒருபோதும் வீணாக்கக்கூடாது என்பதை அவர்களுக்கு வலியுறுத்தவே ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வை திருச்சி பிஷப் கல்லூரி சமூக பணித்துறை பயிற்சியாளர் பிரதீப் ஜான் ஏற்பாடு செய்திருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *