முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே காவிரியாற்றில் உள்ள தண்ணீர் குட்டையில் முதியவர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருவதாக திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்திக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
விரைந்து காவிரியாற்றில் குறைவான நீரில் கிடந்த முதியவரை மீட்டனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது தஞ்சாவூர் அம்மாபேட்டையைச் சேர்ந்த அங்கமுத்து (80 ). இவரது மனைவி மற்றும் மகள் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்றால் காலமாகி விட்டதாகவும், இவரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்ததாகவும் அருகிலிருந்து கவனிக்க உறவினர் யாரும் இல்லாததால் அங்கிருந்து வெளியேறி தற்கொலை செய்ய முடிவெடுத்து ஆட்டோ மூலமாக முக்கொம்பு வந்துள்ளார்.
வனத்துறை அலுவலகம் பின்புறமுள்ள மறைவான பகுதிக்கு சென்று தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்று நீண்ட நேரமாகியும் உயிர் பிரியாததால் வெளியே வந்து காவிரியாற்றில் தேங்கியிருந்த குட்டையில் விழுந்து உயிரை விட முயற்சித்துள்ளார். இதனையெடுத்து அங்கு மீன் பிடிக்க சென்றவர்கள் பார்த்து ஊராட்சி மன்ற தலைவருக்கும்,காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 200 மீட்டர் தூரம் ஆற்றுக்குள்ளிருந்து அவரைத் தூக்கி சென்ற கிராம மக்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆம்புலன்சில் பெரியவரை ஏற்றி அனுப்பி வைத்தனர். அதிகமான ரத்தம் வெளியேறி இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments