திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, 213000 கன அடி தண்ணீர வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் 73000 கன அடியும். கொள்ளிடத்தில் 140000 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறது ஆகவே காவிரி, கொள்ளிடம் மற்றும் இதன் வாய்க்கால்களின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவிரி, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் உள்ள படித்துறைகள் அனைத்தும் மூடப்படுகிறது.
படித்துறையில் குளிப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை. ஆற்றின் கரையோரங்களில் பொதுமக்கள் செல்பி எடுத்தல், புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்து பாதுகாப்பாக இருந்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர்மா.பிரதீப் குமார். தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments