திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில்வே நிலையத்தில் நேற்று சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த நிலையில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் ரயில் பெட்டிகளில் அடியில் சென்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது ரயில் திடீரென கிளம்பியதால் செய்வதறியாது திகைத்த மூதாட்டி தண்டவாளத்தின் அடியிலேயே படுத்துக்கொண்டார்.
உடனடியாக அதன் அருகில் இருந்த கேட் கீப்பர் சரக்கு ரயிலில் சிகப்பு கொடியை அசைத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அதனையடுத்து தண்டவாளத்தின் அடியில் இருந்த மூதாட்டி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இதுபோன்று நின்று கொண்டிருக்கும் ரயில் அருகில் சென்று தண்டவாளத்தை கடக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments