திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவருக்கு சொந்தமான இடத்தினை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை தாசில்தார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளார்.
ஆனால் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த வெற்றி செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments