திருச்சி பைபாஸ் ரோட்டில் காவேரி ஆற்றுப் பகுதி அருகில்,திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் பனையக்குறிச்சி ஊர் எல்லையில் சூராளம்மன் கோவில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பூசாரி சுந்தரம் கோவிலை சுத்தம் செய்து காக்கைக்கு பொங்கல் வைப்பதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார் அப்போது கிணற்றில் ஒரு ஆண் பிணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கோவில் பூசாரி திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல்துறை அதிகாரிகள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த உடலை வெளியே எடுத்தனர்.திருவெறும்பூர் டிஎஸ்பி திரு சுரேஷ் குமார் அவர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் பெயர் தனபால் வயது 60 இவர் லால்குடியைச் சேர்ந்தவர் என்பதும் இவர் இந்த பகுதியில் குப்பை பொறுக்கி அதில் வரும் வருமானத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டு கோயில்களில் படுத்து உறங்குபவர் என்று கூறப்படுகிறது.
மேலும் தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்து பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் இவர் எதற்காக அடித்துக் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார் என்பது குறித்து திருவெறும்பூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
Comments