திருச்சி திருவெறும்பூரில் உள்ள ரயில் நிலைய பிளாட்பாமில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்த ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக திருவெறும்பூர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் பிரேதத்தை பார்வையிட்டதோடு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கூத்தைப் பார் கிராம நிர்வாக அலுவலர் ராதிகாவிடம் புகார் பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இறந்து போன அடையாளம் தெரியாத அந்த வாலிபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இறந்துபோன வாலிபர் வெள்ளை கலர் முழுகை சட்டையும், ஊதா மற்றும் அரக்கு நிறம் கலந்த முக்கா பேண்டும் அணிந்து உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments