தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் காணொளி வாயிலாக, திருச்சி திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.31 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அங்கன்வாடி மையம்,
வாழவந்தான் கோட்டை ஊராட்சி – அய்யம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்ட நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட நியாய விலைக்கடை,பத்தாளப்பேட்டை ஊராட்சியில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம்
சோழமாதேவி ஊராட்சி – பீபிள்ஸ் நகரில் நபார்டு நிதி ரூ.8.04 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிநவல்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்ட நிதி ரூ.12.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட நியாய விலைக்கடை,
பழங்கனான்குடி ஊராட்சி – பூலாங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்ட நிதி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அங்கன்வாடி, நவல்பட்டு ஊராட்சி – அண்ணா நகரில் நபார்டு நிதியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி,
குண்டூர் ஊராட்சியில் 10 ஆயிரம் லிட்டர் மற்றும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் இருவேறு இடங்களில் நபார்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், குண்டூர் ஊராட்சி – திருவளர்ச்சிப்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் நபார்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கீழமுல்லைக்குடி ஊராட்சி – காந்திபுரத்தில்
நபார்டு நிதி ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர்கள்கே எஸ் எம் கருணாநிதி கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments