திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலின் உபகோயிலாக மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் பங்குனி மாத தேரோட்ட திருவிழா கடந்த மார்ச் 31 கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கோவிலின் நான்கு மாட வீதியில் இழுத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments