திருச்சி மாவட்டம் முசிறி ஸ்ரீ கற்பகவள்ளி உடனுறை சந்திரமவுலீஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்னத்தால் சிவலிங்க திருமேனி அலங்கரிக்கப்பட்டது. காய்கறிகள் படையல் இட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.அப்போது விவசாயம் செழிக்கவும் மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும்,உலக உயிர்களுக்கு தேவையான உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும், தொழில் வளம் மேம்படவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு தீபாராதனைக்கு பின்னர் அருட்பிரசாதம் வழங்கப்பட்டு சிவலிங்க திருமேனியில் சாற்றப்பட்டிருந்த அன்னம் அகற்றப்பட்டு ஆறு மற்றும் நீர் நிலைகளில் உள்ள மீன்களுக்கு உணவாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments