திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அண்ணாமலை நேற்று முன்தினம் (08.11.2023) நடைபயணம் மேற்கொண்டார். திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபயணத்தை தொடங்கி அவர், உறையூர் கடைவீதி, சாலை ரோடு, கே.டி.திரையரங்கம் வழியாக, திருச்சி கிழக்கு தொகுதிக்குள்ளே நுழைந்தார்.
பின்னர் கோட்டை இரயில்வே மேம்பாலம், மலைக்கோட்டை வளைவு,தேவர் ஹால், யானை பம்ப், மரக்கடை, எம்.ஜி.ஆர் சிலை வழியாக காந்தி மார்க்கெட்டில் நடைபயணத்தை நிறைவு செய்தார். அண்ணாமலையின் மூன்றாவது கட்ட நடை பயணத்தினையொட்டி அவரை வரவேற்று திருச்சி மாநகரில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் பாஜக கட்சி கொடிகள் சாலையின் இருபுறமும் கட்டப்பட்டிருந்தன.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையிலான கட்சியின் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே நடை பயணம் மேற்கொண்டு இருந்த பொழுது அப்பகுதியாக வந்த பள்ளி மாணவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அவர்களுக்கு கம்பி மத்தாப்புகளை வழங்கி அவர்களுடன் இணைந்து கம்பி கொளுத்தி மகிழ்ந்தார். மேலும் அவர்களுக்கு மத்தாப்புகளும் வழங்கப்பட்டன.
திருவெறும்பூர் பகுதியில் இரவு நேர கடையில் பரோட்டா போட்டார். தொடர்ந்து தனது பயணத்தின் போது இவரும் பல்வேறு விதமாக வாக்காளர்களை கவரக்கூடிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments