தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில் ரூ.1000 ரொக்கப்பணம் குறித்து எந்த தகவலும் இடம்பெறாதது சற்று கவலையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ரொக்க பணம் இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது முதல்வர் மு க ஸ்டாலின் ரொக்கப்பணம் குறித்து அறிவித்துள்ளார். அதாவது பொங்கலையொட்டி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பண்டிகைக்கு முன்பாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 கிடையாதுதமிழக அரசு அறிவித்துள்ளது.
Comments