மத்திய காவல் ஆயுதப் படை, தேசிய புலனாய்வு மற்றும் அதிரடிப்படையில்
பொதுப் பிரிவில் காவலர் (CAPF ‘s, NIA, SSF–ல் Constables GD) பணியிடம் மற்றும் அசாம் ரைபில்ஸ்-ல் பொதுப்பிரிவில், ரைபில் காவலர் (Assam Rifles-ல் Rifleman GD) பணியிடங்களுக்கான எஸ்.எஸ்.சி தேர்வாணைய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் படைவீரர்களுக்கென 10 % இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மொத்த காலிப் பணியிடங்கள் : 25,271. குறைந்தபட்ச கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு, விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-08-2021, ஆன்லைன் வாயிலாக மட்டுமே
விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி https://ssc.nic.in
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமும், தகுதியும் பெற்றுள்ள முன்னாள் படை வீரர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துப் பயன் பெறுமாறும், விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் அதன் விவரத்தினை திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவித்திடுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments