கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்கும் காத்துக் கொள்வதற்கும் பேராயுதம் தடுப்பூசி தான். தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் வயதானவர்கள் ,மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பினருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடு செல்பவர்களுக்கு அவசர தேவையாக கோவிசீல்டு தடுப்பூசி போட வேண்டி உள்ளது .அதை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம் கணேஷ் உத்தரவின் பேரில் நாளை உறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநாடு செல்பவர்களுக்காக கோவிசீல்டு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
நாளை (30.06.2021)காலை 9 மணிக்கு பெரிய மிளகுபாறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கோவிசீல்டு தடுப்பூசி போட விரும்புபவர்கள் விசா நகல் ,ஆதார் கார்டு ,பாஸ்போர்ட் நகல் மேலும் தடுப்பூசி வேண்டும் என்பதற்கான கடிதம் ஆகியவை கொண்டுவர வேண்டும். பொதுமக்களுக்கு இந்த இடத்தில் தடுப்பூசி போடப்படாது.வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் எனவும் இடத்தை மாற்றியும் அறிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments