குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு சில்ரன் சாரிடபுள் ட்ரஸ்ட் மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இவ்விழாவில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பேரணியில் மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். இப்பேரணியானது மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி எதுமலை சாலை, கடைவீதி, மார்க்கெட் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் குழந்தைகள் நலபாதுகாப்பு துறையினர், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments