திருச்சி மாவட்டம் மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் உப்பிலியபுரம் சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டபோது கணக்கில் வராத ரூ 2.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
திருச்சி மாவட்டம் மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜீ தலைமையில் நவநீதகிருஷ்ணன், அருள்ஜோதி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் உள்பட 7 பேர் கொண்ட போலீசார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3.30 மணிக்கு தொடங்கிய சோதனையில் சார்பதிவாளர் புலிப்பாண்டியன் மற்றும் பணிபுரியும் ஊழியர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் நடந்த இந்த சோதனையில் சார்பதிவாளரிடம் ரூ23,500 பணத்தை கைப்பற்றினர். பின்னர் சார்பதிவாளர் தங்கியிருந்த திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் சோதனையிட்டதில் ரூ.1.28 லட்சம் பணம் என ரூ.1 லட்சத்து 51,500 ஆயிரம் சிக்கியது.
பணத்தை கைப்பபற்றியதை தொடர்ந்து லஞ்ச ஊழல் தடுப்பு சட்டதின் கீழ் சார் பதிவாளர் புலிபாண்டியன் மற்றும் அவருக்கு லஞ்ச பணத்தை வசூல் செய்ய உதவியாக இருந்த நபர் உள்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
இதனை தொடர்ந்து நேற்று திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து உப்பிலியபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனையை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத 81 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments