நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா நினைவு நாளில் மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம், SFI மற்றும் DYFI இணைந்து மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் செப்டம்பர் 1ம் தேதி காலை 06:00 மணிக்கு நீட் எதிர்ப்பு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.
இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிகளைத்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இதில் திருச்சி எம்.பி துரை வைகோ, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, சட்டமன்ற உறுப்பினர் இனிக் இருதயராஜ் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்ள முன்பதிவு மற்றும் நுழைவு கட்டணம் செலுத்துவதற்கு கியூ ஆர் கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments