திருச்சி அண்ணாநகர் செல்லும் இணைப்பு சாலையில், உய்யக்கொண்டான் கரையை ஒட்டி மாநகராட்சி சார்பில் நடைப்பயிற்சி தளம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் நுற்றுக்கணக்கான மக்கள் நடைப் பயிற்சி செய்கின்றனர். இதற்காக, இந்த நடைபாதை தளத்தின் ஓரத்தில் பல்வேறு வகையான 250க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு நிழல் தரும் வகையில் பசுமையாக உள்ளன. இம்மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மாநகராட்சி சார்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் பைப்லைன் போட்டு, 13 இடங்களில் திருகு பைப்புகள் அமைத்து அதிலிருந்து குழாய்கள் மூலம் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
நேற்று காலை நடைபாதை முழுவதும் பொருத் தப்பட்டிருந்த 13 திருகு பைப்புகளும் உடைக்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. காலையில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் இதைப் பார்த்து விட்டு, மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முன்தினம் மாலை நடைப் பயிற்சிக்கு வந்த போது பைப்புகள் நன்றாக இருந்தன. அதனால், அன்று இரவுதான் யாரோ சமூக விரோதிகள். இந்த 13 பைப்புகளையும் உடைத்து எறிந்துள்ளனர். அதனால், அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உடைந்த 13 பைப்புகளையும் மீண்டும் பொருத்தி மரங்களுக்கு வழக்கம் போல் தண்ணீர் விட வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, இதுபோன்ற நபர்களை கண்காணிக்க வேண்டும்”, என்றனர். இதுபோன்ற சமூக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறவர்கள்
பொதுமக்களுக்கான பயன்பாட்டில் இருக்கும் பொருள்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்து செய்யக்கூடியது என்பதை முதலில் உணர வேண்டும் அப்படி உணர்ந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments