பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தின விழாவின் போது தமிழக முதலமைச்சர் ஒவ்வோரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்கள் இவ்விருது பெற 2025 -ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கு தமிழக அரசின் இணையதளத்தில்
விண்ணப்பிக்க வேண்டும். பின்பற்ற வேண்டிய அனைத்து விதிமுறைகளும் இவ்விணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 12.06.2025.
விதிமுறைகள்: தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும்இருத்தல் வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர்(ம) நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம்.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments