2021 ஆம் ஆண்டிற்கு கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான பெண்கள்
விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது பெறுவதற்கு
தமிழ்நாட்டையே பூர்வீகமாகக் கொண்டு விளையாட்டுத் துறையில் வீரத்துடன்
துணிவு மற்றும் தைரியாமாக செயல்படும் ஒரு பெண்ணிற்கு இவ்விருது தமிழக
அரசு சார்பாக வழங்கப்படும்.
வருகிற ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி நாட்டின் சுதந்திர தின விழா அன்று தமிழக முதலமைச்சரால் இவ்விருது
வழங்கப்படவுள்ளது. தகுதி மற்றும் திறமையுள்ள பெண்கள் தங்களுடைய முழு விவரங்களுடன், சாதனைகளை தொகுத்து 25.06.2021 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி-23” என்ற முகவரிக்கு 3 பிரதிகளுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி.(தொலைபேசி எண்.0431-2420685) என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments