தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க தகுதிகள் : 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,00 க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றிவருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப் படவேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள் தோறும் உதவித் தொகை ரூபாய் 3,500 மருத்துவப்படி ரூபாய் 500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 31.08.2021க்குள் அளிக்கப்பட வேண்டுமென திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments