Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பகுதி நேர பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “விளையாட்டு இந்தியா” (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்கநிலை மல்யுத்தம் பயிற்சிக்கான “SDAT” – விளையாட்டு இந்தியா மாவட்ட மையம ;” திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்ரங்கில் அமைக்கப்பட உள்ளது.
இம்மையத்தில் 30-100 விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைப்படைத்த 40 வயதுக்குட்பட்ட முன்னாள் சாம்பியன் விளையாட்டு வீரர் / வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போதும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18,000/- வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும்.

இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் www.sdat.tn.gov.in 21.12.2022 முதல் 03.01.2023 மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும்.

உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி தொலைபேசி எண். 0431-2420685 / 7401703494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *