சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2021-2022-ம் நிதியாண்டிற்கு, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் நலிவுற்ற மகளிர் ஆகியோர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற அசல் குடும்ப ஆண்டு வருமானச் சான்று, (ரூ.72,000-க்குள் இருத்தல் வேண்டும்) இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை நகல், குறைந்தபட்சம் ஆறு மாத கால தையல் பயிற்சி பெற்ற சான்றின் நகல், வயதுக்கான சான்று (20 முதல் 40 வயது வரை),
சாதிச் சான்று நகல், ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் மற்றும் முன்னுரிமை கோருவதற்கு சான்றுகள் இருப்பின் அதன் நகல் ஆகியவைகளுடன் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு 30.06.2021-க்குள் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்குமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments