திருச்சி மாவட்டம் அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுநல ஆர்வலர் நவநீதன். இவர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது… திருப்பராய்த்துறை பகுதியில் அல்லூர் மற்றும் பல கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி தவிக்கின்றனர்.
திருப்பராய்த்துறை மின்வாரியத்திலிருந்த புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் பணிக்கு திருப்பராய்த்துறை மின்வாரியத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. திருப்பராய்த்துறை மின்வாரிய அலுவலகமே பொறுப்பாக உள்ளது. மேலும் அடிக்கடி இரவு, பகல் பாராமல் ஏற்படும் மின்தடையால் அல்லூர் பகுதி மக்கள் நிம்மதியின்றி தவிக்கின்றனர்.
எனவே இந்த மின்வாரிய அலுவலகத்திற்கு திறமையான அதிகாரியை நியமித்து மின்தடை ஏற்படாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments