திருச்சி மாவட்ட மூத்தோர் தடகள வீரர் சங்கம், ராக்போர்ட் எரிபந்தாட்ட திருச்சி மாவட்ட சங்கம் சார்பில் தடகள வீரர்கள்களுக்கான பாராட்டு விழா திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சர்வதேச தடகள வீரரும், என்.ஏ அகாடமி நிறுவனருமான டாக்டர். நல்லுசாமி அண்ணாவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ராக்போர்ட் எரிபந்தாட்ட திருச்சி மாவட்ட சங்க தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக உளுந்தூர்பேட்டை பட்டாளியன் காவல் கண்காணிப்பாளர் ஆனந்தன், தமிழ்நாடு வாலிபால் சங்க இணைச்செயலாளர் கலைச்செல்வன், தெற்கு ரயில்வே பணி ஒப்பந்தகாரர் சிங்கம் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மூத்த மற்றும் இளைய தடகள வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினர். இதில் மாவட்டம், மாநிலம் அளவில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீரர்கள், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள்

மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற இளைய தடகள வீரர்கள் பரிசுகளை பெற்றனர். விழாவில் என்.ஏ அகாடமி நிர்வாகிகள் உமாமகேஸ்வரன் , அரவிந்த், சகாதேவன், பனையக்குறிச்சி அலெக்ஸ் மற்றும் இளைய தடகள வீரர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் முன்னதாக ராக்போர்ட் எரிபந்தாட்ட திருச்சி மாவட்ட சங்க துணைத்தலைவர் ஸ்ரீதரன் வரவேற்று பேசினார். இறுதியில் திருச்சி மாவட்ட மூத்தோர் தடகள சங்க செயலாளர் முத்துகுமரன் நன்றி தெரிவித்தார்.

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 10 February, 2024
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments