திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திர அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ராஜசேகரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனில் அக்கறைக்கொண்டு மாணவ மாணவியர்களுக்கிடையே பெற்றோர்களுக்கு கடிதம் எழுதும் பழகத்தை ஊக்குவித்தல்,
மருத்துவர்களை கொண்டு உளவியல் ரீதியான ஆலோசனைகள், போதை பழக்கத்திலிருந்து மாணவர்களின் பெற்றோர்களை மீட்டெடுத்தல், மீண்டு வந்தவர்களை கௌரவப்படுத்துதல், புத்தக வாசிப்பு, விதை பந்துகள் தூவுதல், இடைநின்றல் மாணவ மாணவியர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைத்தல் என மாணவ மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக மாணவ மாணவிர்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதும் பழகத்தை முன்னேடுத்த நிலையில், அவற்றில் பல மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோர்களை அவர்கள் அடிமையாகியுள்ள போதை பொருட்களை கைவிட வலியுறுத்தி இருந்தனர். தன் பிள்ளைகளின் கடிதத்தால் மனம் திருந்திய சில பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து இனி போதை பொருட்களை எடுத்துகொள்வதில்லை என உறுதிமொழி அளித்தனர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில், நேற்று சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில், அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்து, சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், பாராட்டு சான்றிதழ் வழங்கியும் பாராட்டபட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments