திருச்சியில் ஆரன்யா ஹெல்த்கேர் சார்பில் காவல் துறை முன் களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 500 ஆயுர்வேத சோப்பினை திருச்சி சரக போலீஸ் டிஐஜி ஆனி விஜயாவிடம் ஆரன்யா ஹெல்த்கேர் மாரிமுத்து இன்று நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
மேலும் பத்திரிக்கை ஊடகவியலாளர் விடுத்த கோரிக்கைகளை ஏற்று திருச்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலிந்தோர் குடும்பத்திற்கு டிஐஜி ஆனி விஜயா ஏற்பாட்டில் திருச்சி லயன்ஸ் சங்க பொறுப்பாளர் பன்னீர்செல்வம் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
திருச்சி சரக காவல்துறை சார்பில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க 25 கிலோ பழங்களை டிஐஜி ஆனி விஜயா லயன்ஸ் சங்க பொறுப்பாளர்களிடம் இன்று வழங்கியுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments