Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

பப்பி வாங்க போறீங்களா? மருத்துவர் கணேஷ் குமாரின் டிப்ஸ் உங்களுக்கு…..

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எப்போதுமே ஒரு காதல் இருந்து வருகிறது. வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை வளர்க்கும் ஆர்வம் நம்மிடையே உள்ளது. முக்கியமாக, விதவிதமான வெளிநாட்டு நாய்கள், கம்பீரமாக உள்ளூர் நாய்களை வளர்ப்பதில் இன்றையை தலைமுறையினரிடையே ஆர்வம் அதிகமாகவே உள்ளது. அந்த நாயுடன் குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது என, வீட்டில் ஒரு நபராகவே நாய்கள் மாறி வருகின்றன. நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடடுவதும், அதே நாய் தொலைந்து போனால் போஸ்டர் அடித்து தேடுவதும், இறந்தால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வரையில் சென்றுவிட்டது. இன்று பலரது வீடுகளில் குழந்தைகளுக்கு நிகரான இடத்தை நாய்களும் பெற்றுள்ளன. மக்களுக்கு நாய் வளர்ப்பதன் மீதுள்ள ஆர்வத்தால் நாய்களுக்கான விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில், நாய்கள் வாங்குவது மற்றும் பராமரிப்பது குறித்து பொதுவான விசயங்களை அறிந்துக் கொள்ள வேண்டும். இதுகுறித்து பெட் கேலக்ஸி (Pet Galaxy) நிறுவனரும், கால்நடை மருத்துவருமான கணேஷ் குமார் சில தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். 

இதில்…. எந்த வகையான நாய்கள் வீட்டில் வளர்க்கலாம். ஆரோக்கியமான நாய்கள் தான் வாங்குகின்றோமா என்று எப்படி தெரிந்து கொள்வது? ஒரு வயது வரைக்கு என்னென்ன உணவு சாப்பிட கொடுக்கலாம்? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். ஆனா நீங்கள் குடியிருக்கும் இடத்தை பொறுத்து தான் நாய்கள் தேர்வு செய்ய வேண்டும். நாய்களில் டாய், ஸ்மால், மீடியம், லார்ஜ் ‘ஜெயன்ட்’ என அதன் உடல் வளர்ச்சியை பொறுத்து 4 வகையாக பிரிக்கலாம். அபார்ட்மெண்ட்டில் குடியிருப்போருக்கு டாய் பிரீட் ஏற்றது. டாய் பிரீட் வாங்குவதாக இருந்தால் பிறந்து 10 – 12 வாரங்களான பப்பி வாங்கலாம். மற்ற பிரீட்கள், 6 – 8 வாரங்கள் ஆகியிருந்தால் வாங்கலாம்.

  • குறிப்பாக காது, காதுமடலின் வெளிப்புறம் உட்புறங்களில் சிவப்பாக தடித்து இருக்க கூடாது.
  • காதில் நாற்றம் எதுவும் வரக்கூடாது. 
  • மூக்கு, கண்ணில் நீர் வடியாமல் இருக்க வேண்டும். தும்மல் இருக்க கூடாது.
  • தோல்முடி உதிராமல், சொட்டை இல்லாமல். பளபளப்பாக இருக்க வேண்டும்.
  • கண்கள் விழிப்போடு பிரகாசமாக இருக்க வேண்டும்.

ஹெல்தியான பப்பி வாங்கி வந்தால் மட்டும் போதாது. ஒரு வயது வரை, உணவு, பராமரிப்பு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பிறந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒருமுறை குடல்புழுநீக்க மருந்து கொடுக்கணும். 4-12 மாதங்கள் ஆன பப்பிக்கு மாதம் ஒருமுறை குடல்புழு நீக்கம் செய்யணும். வீட்டிலே தயாரித்து கொடுக்க, இருவகை உணவு முறைகள் உள்ளன. முதல்வகை உணவு : மில்க் பவுடர் 200 கிராம், கிரீம் 200 மி.லி, அரிசி கஞ்சி 200 மி.லி, கொதிக்க வைத்து ஆறிய தண்ணீர் 400 கிராம் கொடுக்கலாம். இரண்டாம் வகை உணவு, 700 மி.லி பசும் பால், கிரீம் 200 மி.லி, முட்டை மஞ்சள் கரு, அரிசி கஞ்சி 50 மி.லி கொடுக்கலாம். இதை ஒவ்வொரு வகை பிரீடுக்கும், தினசரி எத்தனை முறை பிரித்து கொடுக்க வேண்டுமென்ற அளவீடு உள்ளது. இதுதவிர ரெடிமேட் உணவுகளும் பப்பிகளுக்கு கடைகளில் விற்கப்படுகிறது. அதில் கொடுக்கப்படும் அளவீடு மட்டுமே கொடுக்க வேண்டும். ரெடிமேட் உணவு கொடுத்தால், வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கொடுக்க தேவையில்லை.

தோட்டம் மற்றும் பண்ணைகளில் நாட்டு இன நாய்களான கன்னி, ராஜபாளையம், கோம்பி வளர்க்கலாம். வீட்டு காவலுக்கு ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன், பிராட்டிலர் வளர்க்கலாம். அழகுக்காக நாய்கள் வளர்க வேண்டும் என்றால் உங்களுக்கு பிடித்தமான இன நாய்களை தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பாக ஒவ்வொரு இன நாய்களுக்கும் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வீடுகளில் தயாரித்துக் கொடுப்பதில் சிரமம் இருக்குமேயானால் மருத்துவரை அணுகி அதற்குத் தேவையான உணவுகளை குறித்த தகவல்களைப் பெற்று அதற்கு வழங்கினால் நாய்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *