Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பள்ளி படிப்பு முடித்து கல்லூரி செல்பவரா நீங்கள்? – 100% வேலைவாய்ப்புடன் இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சியில் தேசிய கல்லூரியில் அறிமுகமாகும் படிப்பு!!

பள்ளிப்படிப்பை முடித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அடுத்து என்ன படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்ற சிந்தனைகள் தோன்றும். உங்கள் கனவுகள் அனைத்தையும் மெய்ப்பிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக நம்முடைய திருச்சி மாநகரில் யூனிபார்ம் சர்வீஸ் (BA, Uniform Service) பட்டப் படிப்பை திருச்சி தேசியக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே 1919ம் ஆண்டு அப்போதைய சிராப்பள்ளி சுற்றுவட்டார மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கல்லூரி. இந்தியாவின் குடியரசு தலைவர், இன்றைய நீயா நானா கோபிநாத் உள்பட பல பிரபலங்களையும், அம்மன் டி.ஆர்.ஒய் சோமசுந்தரம் உட்பட பல தொழில் அதிபர்களையும் உருவாக்கிய ஒரு கல்லூரி என்றால் அது நம்முடைய திருச்சி தேசிய கல்லூரி தான். 

நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் பல மாணவர்களின் கனவுகளை மெய்ப்பிக்கும் வகையில் கல்விப் பணியில் தொடர்ந்து சேவை செய்துவரும் இக்கல்லூரியில் உலகத்தரத்திற்கு இணையாக யூனிபார்ம் சர்வீஸ் என்னும் பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது.

உலக அளவில் இங்கிலாந்தில் லண்டனில் உள்ள செஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்டு வரும் இந்த யூனிபார்ம் சர்வீஸ் பட்டப்படிப்பினை நம்முடைய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி தேசியக் கல்லூரி விளையாட்டு ஆராய்ச்சி துறையின் கீழ் இந்திய அளவில் தொடங்கப்படுவது திருச்சிக்கு மட்டுமல்ல அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒன்று.

அந்த வகையில் திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டு ஆராய்ச்சி துறையின் கீழ் தொடங்கப்படவுள்ள இந்த யூனிஃபார்ம் சர்வீஸ் பாடப்பிரிவில் மாணவர்களுக்கு பன்முக திறனை வளர்க்கும் வகையில் இந்திய வரலாறு, இந்திய அரசியல் சாசனம், இந்திய கட்டமைப்பு மற்றும் நிர்வாகம், ராணுவ தொழில்நுட்பம், குற்றவியல் அறிவியலை புலமையோடு ஆராய்தல், நுண் அறிவியல், தடயவியல், தொலைத்தொடர்பு நுட்பங்கள், கணிப்பொறி, இணையம், பொது அறிவு, உடற்கல்வியியல் சார்ந்த படிப்புகள், உளவியல் மற்றும் மனதையும் உடலையும் தயார் செய்யும் முறை, உணவு உட்கொள்ளும் முறை, விளையாட்டு விபத்து மற்றும் தடுப்பு குறித்த படிப்புகள், இந்திய பாதுகாப்பு போன்ற பல பாடத்திட்டங்களை மையமாகக் கொண்டு இந்த யூனிஃபார்ம் சர்வீஸ் பாடம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே திருச்சியில் கற்பிக்கப்பட்டு வரும் இந்த பாடப்பிரிவுகள் கீழ் பல்வேறு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில் எல்லை பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு,  இந்திய எல்லை ராணுவம், இந்தியன் காவல், காவல் துறை மேம்பாடு, பாதுகாப்பின் கட்டுமானம் புரிதல், இந்திய பாதுகாப்பு வரலாறு, சட்டம் மற்றும் சிறைத்துறை, அவசரகால மருத்துவ உதவி, பொதுநல மக்கள் சேவை, பாஸ்போர்ட் அலுவலகம், யுபிஎஸ்சி எக்ஸாம் சர்வீசஸ், NAVY, ARMY, AFCAT, IB/RAW, INET, CAPF, மற்றும் மாநில காவல்துறை ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன..

கல்லூரி வசதிகள்

1.பசுமையான கல்லூரி வளாகம்
2.நூலக வசதி
3.இயற்கையான சூழலில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம்
4.ஆடியோ விஷுவல் லேப்
5.நுண்ணறிவு சார்ந்த நூலகம்
6.மாணவர்களின் பன்முக திறமையை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் என உலகத் தரத்திற்கு இணையாக நம்ம ஊர் திருச்சியில் தேசிய கல்லூரியில் விளையாட்டு ஆராய்ச்சித் துறை சார்பாக வருகின்ற கல்வி ஆண்டில் பிரம்மாண்டமாக யூனிபார்ம் சர்வீஸ் பட்டப்படிப்பு தொடங்க உள்ளது..

இந்த யூனிபார்ம் சர்வீஸ் பட்டப் படிப்பினை படிப்பதன் மூலம் CRPFல் அலுவலர் பணியிடங்கள்:

ASST COMMANDANT (தொடக்க நியமனம்)
ஊக்குவிப்பு அம்சங்கள்
கமாண்டன்ட். உதவியாளராக 5 ஆண்டுகள். 

இரண்டாவது கமாண்ட்நாட். 5 ஆண்டுகள் Dy.Commandant ஆக (மொத்தம் 10 ஆண்டுகள் குழு ‘A’ சேவையுடன்).

கமாண்டன்ட் 5 ஆண்டுகள் இரண்டாம் கட்டளையாக (15 ஆண்டுகள் குழு ‘ஏ’ சேவையுடன்)
டி.ஐ.ஜி.பி 3 ஆண்டுகள் கமாண்டண்டாக (20 ஆண்டுகள் குழு ‘ஏ’ சேவையுடன்)
ஐ.ஜி.பி 3 ஆண்டுகள் டி.ஐ.ஜி (24 ஆண்டுகள் குழு ‘ஏ’ சேவை)

CRPFல் தேர்ச்சி பெற்றால் 
கான்ஸ்டபிள் முதல் தலைமை கான்ஸ்டபிள் தலைமை கான்ஸ்டபிள் முதல் சப்-இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் வரை இன்ஸ்பெக்டர்
சேர்க்கப்பட்ட தேதியிலிருந்து கான்ஸ்டபிளாக குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும். உதவி கமாண்டண்டிற்கு இன்ஸ்பெக்டர்
அந்த பதவியில் 3 ஆண்டுகள் குறைந்தபட்ச சேவையுடன் இன்ஸ்பெக்டரை உயர்த்துவதன் மூலம் இந்திய விமானப்படை
அதிகாரி (GROUND DUTY, LOGISTICS BRANCH-NON TECHNICAL) 
1. துணை கமாண்டன்ட்
2.காமண்டன்ட் (ஜே.ஜி)
3. கமாண்டன்ட்
4. துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்
5.இன்ஸ்பெக்டர் ஜெனரல்
6. கூடுதல் இயக்குநர் ஜெனரல்
7. டைரக்டர் ஜெனரல்

போன்ற பணிகளில் தாராளமாக வேலைக்கு அமரலாம்.

அமலாக்க / கணக்கு அலுவலர் 
 உதவி பி.எஃப் கமிஷனர்
பிராந்திய பி.எஃப் கமிஷனர்- II 
பிராந்திய பி.எஃப் கமிஷனர்- I 
கூடுதல் மத்திய பி.எஃப் கமிஷனர் 
கூடுதல் மத்திய பி.எஃப் கமிஷனர் (ஹெச்.யூ)

இந்திய ரயில்வே ஆஸ்ட் செக்யூரிட்டி கமிஷனர்

ரெயில்வே பாதுகாப்பு ஃபோர்ஸ் ஆர்.பி.எஃப் -ல் A.S.C அலுவலர் பணி

1.டைரக்டர் ஜெனரல் 
2.கூடுதல் டைரக்டர் ஜெனரல்
3.முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர்
4.துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்
5.சீஃப் பாதுகாப்பு ஆணையர் 
6.கூடுதல் இயக்குநர் ஜெனரல் / இன்ஸ்பெக்டர் ஜெனரல் / துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்
7.மூத்த கமாண்டன்ட் 
8.மூத்த கமாண்டன்ட் (ஒரு தலைவராக நியமிக்கப்படும்போது பிரிவு கூடுதல் இயக்குநர் ஜெனரல் / இன்ஸ்பெக்டர் ஜெனரல் / துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்டாஃப் ஆபீசர்
9.கமாண்டன்ட் (சிறிய ஆயுதங்கள்) கட்டளை அதிகாரி (சிறிய ஆயுதங்கள்)
10.உதவி கமாண்டன்ட் உதவி பாதுகாப்பு ஆணையர் 
11.உதவி கமாண்டன்ட் / ஆர்.பி.எஸ்.எஃப் உதவி கமாண்டன்ட் 
12.உதவி கமாண்டன்ட் (அட்ஜூடண்ட்) அட்ஜூடண்ட் 
13. உதவி கமாண்டன்ட் (முதன்மை பயிற்சி)
சப்-இன்ஸ்பெக்டர்-ரயில்வே பாதுகாப்பு பணி
• பதவி உயர்வு வாய்ப்புகள் இன்ஸ்பெக்டர்
• வட்ட ஆய்வாளர்
• மண்டல ஆய்வாளர்
Y Dy கண்காணிப்பாளர்
மற்றும் ரயில்வே பாதுகாப்பு 

உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கான பயிற்சிகளும் படிப்புகளும் உலகத்தரத்தில் நம்முடைய திருச்சி தேசிய கல்லூரி விளையாட்டு ஆராய்ச்சித்துறை சார்பாக கற்பிக்கப்பட்டு பணி வாய்ப்பினை உறுதி செய்கின்றோம்.மாணவர்கள் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் கனவுகளை மெய்ப்பிக்க அழைக்கிறது திருச்சி தேசிய கல்லூரி!!

மேலும் தொடர்புக்கு
டாக்டர்.பிரசன்னா பாலாஜி
துணை முதல்வர்
தேசிய கல்லூரி,திருச்சி
9994491882

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *