திருச்சி நகரியம் கோட்டம், சிந்தாமணி பிரிவிற்குட்பட்ட கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள காவேரி நகர், ஜெயராம் நகர், பெரியார் நகர் அதே போல் பொன்னகர் பிரிவிற்குட்பட்ட பெரியமிளகு பாறை ஆகிய பகுதியில் உயரமுத்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் நாளை (05.03.2022) காலை 9.30 மணி முதல் மாலை 03.30 வரை மின்விநியோகம் இருக்காது என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற் பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மின்தடை புகார் மற்றும் மின் தடை சம்பந்தமான தகவல்களுக்கு 1912 அல்லது 18004252912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments