திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நீர்ப்பணி நிலையம், பெரியார் நகர், கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 23.07.2021 காலை 9 மணி முதல் 4 மணிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் கம்பரசம்பேட்டை தலைமை நற்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும்
டர்பைன் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மலக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர், கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லை நகர், அண்ணா நகர், புத்தூர், காஜாபேட்டை, கண்டோன்மென்ட், ஜங்ஷன், உய்யகொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும் மற்றும் பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ்நகர், ஜெயா நகர் மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும்
நாளை 23.07.2021 ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது 24.07.2021 நாளை மறுநாள் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாணவருடன் ஒத்துழைக்குமாறு குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments