திருச்சி E.B.ரோடு துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2023) (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், வெல்லமண்டி ரோடு, கிருஷ்ணாபுரம் ரோடு,
சின்னகடைவீதி, N.S.B ரோடு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி (ஒரு பகுதி). மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில்
நாளை (02.09.2023) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி இயக்கலும் காத்தலும், நகரியம், செயற்பொறியாளர் பொறிஞர்.பா.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments